புதன், 22 ஏப்ரல், 2009

இரும்புக்கை மாயாவி ரசிகர்நண்பர்களே, வணக்கம். நமது தமிழ் காமிக்ஸ் உலகில் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் சிலரும் வாசகர்கள் என்பதை அவ்வபோது நண்பர்கள் எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் டைரக்டர் கே வி ஆனந்தும் தனது சிறுவயது காமிக்ஸ் கதாநாயகனை பற்றி கூறி உள்ளார். தனது அடுத்த அதிரடி திரைப்படங்களையும் காமிக்ஸ் கதை பாணியில் தருவார் என எதிர் பார்க்கிறேன் . (நன்றி: குங்குமத்தில் வெளிவந்தது.)

இலங்கை தமிழர்கள் வாழ்வில் என்று அமைதி ஏற்படுமோ தெரியவில்லை, நமது ஆசிரியர் விஜயன் போர்களத்தில் சிக்கி கொண்ட ஒரு காமிக்ஸ் ஆர்டிஸ்ட் பற்றிய விளம்பரம் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு அந்த கதை என்னாயிற்று என்று தெரியவில்லை. அது போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட காமிக்ஸ் வெளியிட்டால் வாசகர்களும் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இந்த முறை அதிகம் எழுதி விட்டேன் போல? மீண்டும் சந்திப்போம்.

வியாழன், 9 ஏப்ரல், 2009

லக்கி லூக் போன்ற ஒரு படம் ?

நண்பர்களே, வணக்கம். என்னிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பற்றி நிறைய நண்பர்கள் பின்னூட்டம் இடுவதால் அதை ரசிக்கவே நானும் விரும்புகிறேன்.

எனவே நான் நமக்கு பிடித்த காமிக்ஸ் பற்றி பிறர் தராத விசயங்களை தர வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் நான் கண்ட ஒரு தமிழ் படத்திற்கான விளம்பரம், சிம்பு தேவன் இயக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் பற்றி. சிம்பு தேவன் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால் நிச்சயம் நமது லயன்காமிக்ஸ் படித்திருப்பார் . அவர் மனதிலும் ஒரு ஆசை உருவாகி இருக்கும், வருங்காலத்தில் லக்கி லூக் போன்ற ஒரு காமெடி படம் பண்ண வேண்டும் என்று. அதிலும் நான் ரசித்த விஷயம் செவ்விதிந்தியர்கள் பற்றி இந்த படத்தில் காண்பிக்க போகிறார்கள் என்பதுதான்.

நிச்சயமாக அந்த பூர்விக மக்களை பற்றிய பரிதாபமான உண்மைகளை காமெடி கலந்து சிம்பு தேவன் தருவார் என்று நம்புகிறேன் .

மீண்டும் சந்திப்போம் .