ஞாயிறு, 19 டிசம்பர், 2010

திங்கள், 15 நவம்பர், 2010

DESIGNS BY ME

 
 
 
 
Posted by Picasa

செவ்வாய், 9 நவம்பர், 2010

வெள்ளி, 8 அக்டோபர், 2010

திங்கள், 20 செப்டம்பர், 2010

எந்திரன் ஜுரம்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ‘எந்திரன்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எந்திரன் டிக்கெட் விற்பனையில் அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புதன், 4 ஆகஸ்ட், 2010

ஜேம்ஸ்பாண்ட் கதாசிரியர் மரணம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: டயமன்ட்ஸ் ஆர் பார்எவர், லிவ் அண்ட் லெட் டை உள்பட பல ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு திரைக்கதை எழுதிய மேன்கிவிஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. கடந்த மூன்று மாதங்களாக கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு மேன்கிவிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் உயிரிழந்துள்ளார். மேன்கிவிஸ் பல திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். 1987ல் வெளியான டிராக்நெட் படம் அவரது இயக்கத்தில் உருவானது. பல சீரியல்களையும் இயக்கியுள்ளார். அவரது தந்தையும் சினிமாபட இயக்குநர் தான். தி மேன் வித் த கோல்டன் கன் கதையையும் இவர் எழுதியுள்ளார். 1978ல் சூப்பர்மேன்ஸ் கிரிப்ட்டை உருவாக்கினார். கலிபோர்னியாவின் ஆரன்ச்சில் உள்ள சேப்மேன் பல்கலைகழகத்தில் படத் தயாரிப்பு பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தவர் மேன்கிவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!


இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!

சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரான் 'இந்தியாவிற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவோம்' என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், இவருடைய மூதாதையர்கள் இந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் என்றும், இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கியவர்கள் என்றும் லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

டேவிட் கேமரானின் தாத்தாவுக்கு கொள்ளு தாத்தா வில்லியம் லோ. இந்தியா பிரிட்டனின் அடிமை நாடாக இருந்தபோது, சுதந்திர போராட்டம் சூடு பிடித்தபோது பிரிட்டன் அரசின் குதிரைப்படைத் தளபதியாக இருந்தவர். இந்தத் தகுதியை வைத்துக் கொண்டு சுதந்திரம் கேட்டு போராடிய ஏராளமான இந்தியர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் தன்னுடைய வாளால் வெட்டிக்கொன்றவர் என்று தெரியவந்துள்ளது.

குதிரைப்படையைத் தலைமை தாங்கிச் சென்று, எதிர்த்து வந்த இந்தியர்களை வில்லியம் லோ வெட்டி வீசிய, மொத்தமாக தூக்கில் தொங்கவிட்ட நினைவுகளை அவரே ஓவியமாகத் தீட்டி விட்டு மறைந்திருக்கிறார். அந்த ஓவியங்கள் பிரிட்டன் நூலகத்தில் பத்திரமாக உள்ளன. இந்நிகழ்வு குறித்து வில்லியம் லோ தன்னுடைய மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதங்களையும் பிரிட்டன் நுலகம் பத்திரமாக வைத்துள்ளது.

வில்லியம் லோ தன்னுடைய மேலதிகாரியும், தந்தையுமான ஜெனரல் சர் ஜான் லோ வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நமது குதிரைப்படை வெற்றியைச் சந்தித்துள்ளது. பழங்குடிகள் (இந்தியர்கள்) படை முறியடிக்கப்பட்டு விட்டது. அவர்களைச் சுத்தமாக அழித்துவிட்டோம் என்றே சொல்லவேண்டும். நூறுக்கும் மேற்பட்ட அவர்களுடைய பிணங்கள் அங்கங்கே சிதறியுள்ளன. நம் பக்கமும் ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.

இந்தக் கடிதங்களில் சிலவற்றை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

அனுபவம் வாய்ந்த குதிரை வீரன் குதிரையில் ஏறி வரும்போது, எதிரே வரும் தரைப்படையினரை வெட்டிச் சாய்த்துக் கொண்டே செல்வது எளிதான விஷயம். அப்படித்தான் வில்லியம் லோ மற்றும் அவருடைய படையினர் இந்தியர்களை கொன்று குவித்துள்ளனர்.

தற்போதைய பிரதமர் டேவிட் கேமரானின் பரம்பரை குறித்து மானிடவியல் அறிஞர் நிக் பாரட் ஆய்வுசெய்திருக்கிறார். அவருடைய முடிவுப்படி வில்லியம் லோ, சர் வில்லியம் மவுண்ட் என்பவரின் தாத்தா ஆவார். வில்லியம் மவுண்ட் எலிசபெத் லீவெல்லியன் என்பவரை கடந்த 1929 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினர் தான் இன்றைய பிரதமர் டேவிட் கேமரானின் நேரடியான தாத்தா பாட்டி என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நம்பர் 10, டவுனிங்ஹால் முகவரியில் உள்ளவர்கள் யாரும் பதில் எதுவும் கூறவில்லை. அதுதாங்க இங்கிலாந்து பிரதமரின் வீட்டு முகவரி!

வாழ்க ஆங்கிலேய அடிவருடி அரசியல்வாதிகள், வியாபார பண முதலைகள்!

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

எ. பி. காஎன்ன? தலைப்பை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா? அமரர் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” தொடரில் எனக்கு பிடித்த கவிதைகள் என்பதை சுருக்கி “எ.பி.க” என்று எழுதுவார்! இங்கே என்னிடம் உள்ள சில காமிக்ஸ் கதைகளின் அட்டைகளை பின்னூட்டத்தில் சேர்த்துள்ளேன். ரிப்போர்டரை வைத்து ஏதேனும் படம், கார்டூன் படம் எந்த மொழியிலாவது வந்துள்ளதா?


எந்திரன் ஐடியூனில் சாதனை படைத்துள்ளது! ஆம், ஒரு தமிழ் படம் முதன்முறையாக ஆன் லைன் இசை விற்பனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது! ரஜினியின் இந்த படம் நாளைய தமிழ் திரையுலகின் இளம் கலைஞர்களுக்கு ஹாலிவுட் கதவுகளை திறக்கும் என நம்புகிறேன்!

சனி, 22 மே, 2010

மரணத்தின் தாகம்

ஹாய் நண்பர்களே!

லைலா புயல் வழக்கம் போல் ஒரிசா பக்கமாக ஓடி விட்டது! இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு வீடியோ கேம் பற்றியது! RED DEAD REDEMPTION என்ற பெயரில் xbox 360 , ps3 console காக ரீலீஸ் ஆகி உள்ளது. இந்த கேம் பற்றிய முக்கியமான விஷயம் இது கௌபாய் கதையை தழுவி வடிவமைக்க பட்டுள்ளது தான்.

இந்த கேம் மில் ஜான் மார்ஸ்டன் என்ற முன்னாள் திருடனின் கதாபாத்திரத்தில் நாம் விளையாட வேண்டும். டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் போன்ற கெளபாய் கதைகள் மீது தீரா காதல் கொண்ட வாசகர்களுக்கு, மேற்கத்திய கௌபாய் உலகில் உலா வர இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

புதன், 6 ஜனவரி, 2010ஜனவரி மாத புத்தக கண்காட்சி பற்றி உங்களுக்கு சொல்ல தேவையில்லை ! எல்லாரும் விரும்பும் எதிர்பார்க்கும் ஒரு கண்காட்சி , ஆனால் இந்த வருட புத்தக கண்காட்சியில் நமது லயன் முத்து காமிக்ஸ் என்று ஒரு ஸ்டால் இல்லாதது வருத்தமே, ஒரு வருட சந்தா, ரத்தபடலம் முன்பதிவு , பழைய காமிக்ஸ்களின் அணிவகுப்புகள் என்ற நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது :- ( அதைவிட கொடுமை பல ஸ்டால்களில் தமிழ் காமிக்ஸ் இங்கு எங்காவது இருக்குமா என்று கேட்டதற்கு " தமிழ் காமிக்ஸா? தெரியாதே சார், வேணும்னா சூப்பர் மென் , பேட் மென் காமிக்ஸ் கெடைக்கும் " என்றார்கள் .