வியாழன், 9 ஏப்ரல், 2009

லக்கி லூக் போன்ற ஒரு படம் ?

நண்பர்களே, வணக்கம். என்னிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பற்றி நிறைய நண்பர்கள் பின்னூட்டம் இடுவதால் அதை ரசிக்கவே நானும் விரும்புகிறேன்.

எனவே நான் நமக்கு பிடித்த காமிக்ஸ் பற்றி பிறர் தராத விசயங்களை தர வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் நான் கண்ட ஒரு தமிழ் படத்திற்கான விளம்பரம், சிம்பு தேவன் இயக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் பற்றி. சிம்பு தேவன் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால் நிச்சயம் நமது லயன்காமிக்ஸ் படித்திருப்பார் . அவர் மனதிலும் ஒரு ஆசை உருவாகி இருக்கும், வருங்காலத்தில் லக்கி லூக் போன்ற ஒரு காமெடி படம் பண்ண வேண்டும் என்று. அதிலும் நான் ரசித்த விஷயம் செவ்விதிந்தியர்கள் பற்றி இந்த படத்தில் காண்பிக்க போகிறார்கள் என்பதுதான்.

நிச்சயமாக அந்த பூர்விக மக்களை பற்றிய பரிதாபமான உண்மைகளை காமெடி கலந்து சிம்பு தேவன் தருவார் என்று நம்புகிறேன் .

மீண்டும் சந்திப்போம் .

1 கருத்து:

Rafiq Raja சொன்னது…

டைகர் நண்பரே, சிம்புதேவன் படம் எடுக்க எத்தனித்துள்ளார் என்று படித்தேன், ஆனால் போஸ்டர் பார்த்த நியாபகம் இல்லை. தமிழில் எனக்கு தெரிந்து வெளியான கவ்பாய் கதைகள் மிகவும் அரிது. சென்ற முறை மிக காலம் கழித்து ராஜா ராணி காலத்து கதையை சிரிப்பு படையலாக படைத்து இருந்தார். அதனால், இந்த கவ்பாய் கதையும் கலக்குவார் என்று நம்புகிறேன். நீங்கள் கூறியது போல லக்கி லுக்கின் நிறைய சாகசங்களை இங்கு காண கிடைக்கலாம்.

எனக்கு இருக்கும் ஒரே குறை லாரண்ஸை அவர் கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இருப்பதே... லாரண்ஸின் நடிப்பில் அவ்வளவாக காமெடி தெரியாது என்பதால் அப்படி கூறினேன். வடிவேலுவை மீண்டும் அணுகியதாகவும், அவர் மறுக்கவே இவரை தேர்ந்தெடுத்தகாவும் தகவல்.

தொடருங்கள் உங்கள் வித்ததியாசமான பதிவுகளை.

காமிக்கியல் & ராணி காமிக்ஸ்