ஞாயிறு, 11 அக்டோபர், 2009

சிறிய முயற்சிகளோடு ஒரு சிறகு விரிகிறதுஎன்னுடைய ஒரு புதிய முயற்சியாக ஒரு சித்திர கதையை உருவாக்கி கொண்டு இருக்கிறேன், நன்றி லயன் காமிக்ஸ் க்கு , எனது ஓவிய திறமையை எனக்கு தெரிய வைத்ததற்கு.
நிச்சயம் ஒரு கௌ பாய் கதையை தான் உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது , காரணம் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, கேப்டன் டைகர் கதைகள் தான். வரலாற்று உண்மைகள் கலந்த ஒரு கதையாக என்னுடைய சித்திர கதை இருக்கும். முழுவதும் ஸ்கேன் செய்து இந்த தளத்தில் ஏற்ற இருக்கிறேன், இது என்னுடைய சிறு வயது கனவை நனவாக்கும் ஒரு முயற்சி , அவ்வளவே! வியாபார ரீதியான முயற்சி அல்ல. இந்த சித்திர கதை உங்கள் வரவேற்பை பெற்றால் , சமுக ரீதியான அவலங்களை இளைய சமுதாயத்துக்கு தெரிய படுத்தும் வகையில் சித்திர கதைகளை உருவாக்கும் எண்ணம் உள்ளது. நன்றி நண்பர்களே!

1 கருத்து:

Rafiq Raja சொன்னது…

நல்ல ஒரு தொடக்கம். காமிக்ஸ் படித்த எல்லா ரசிகர்களுக்கும், தானும் ஒரு ஓவியன் ஆகும் எண்ணம், பிரம்மாண்டமாக இருக்கும், நான் உட்பட. ஆனால், பிரதான வேலையின் நடுவே அந்த எண்ணம் மறந்து மரத்து போய் விட்டது.

நீங்கள் அதை தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் கைவண்ணத்தில் ஒரு புதிய கவ்பாய் சாகசத்தின் ஒரு இரண்டு பக்கங்களை காணும் ஆவலுடன் இருக்கிறேன்.

விரைவில் களமேற்றுங்கள்.