புதன், 22 ஏப்ரல், 2009

இரும்புக்கை மாயாவி ரசிகர்



நண்பர்களே, வணக்கம். நமது தமிழ் காமிக்ஸ் உலகில் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் சிலரும் வாசகர்கள் என்பதை அவ்வபோது நண்பர்கள் எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் டைரக்டர் கே வி ஆனந்தும் தனது சிறுவயது காமிக்ஸ் கதாநாயகனை பற்றி கூறி உள்ளார். தனது அடுத்த அதிரடி திரைப்படங்களையும் காமிக்ஸ் கதை பாணியில் தருவார் என எதிர் பார்க்கிறேன் . (நன்றி: குங்குமத்தில் வெளிவந்தது.)

இலங்கை தமிழர்கள் வாழ்வில் என்று அமைதி ஏற்படுமோ தெரியவில்லை, நமது ஆசிரியர் விஜயன் போர்களத்தில் சிக்கி கொண்ட ஒரு காமிக்ஸ் ஆர்டிஸ்ட் பற்றிய விளம்பரம் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு அந்த கதை என்னாயிற்று என்று தெரியவில்லை. அது போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட காமிக்ஸ் வெளியிட்டால் வாசகர்களும் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இந்த முறை அதிகம் எழுதி விட்டேன் போல? மீண்டும் சந்திப்போம்.

5 கருத்துகள்:

Rafiq Raja சொன்னது…

80 களில் திரைப்படம் போன்ற ஃபேன்டஸி தொழிலில் வேலை செய்தவர்கள் அனைவரும் காமிக்ஸ், போன்ற ஊடகங்களின் மூலம் கற்பனா திறனை வளர்த்திருப்பார்கள் என்பது ஒரு மறுக்கக முடியாத உண்மையாக தெரிகிறது. ஆனந்தும் அந்த வரிசையில் இருக்கிறார் என்பதில் பெருமிதம்.

பார்ப்போம், இந்த தாக்கத்தை அவர்களின் படங்களில் எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்று.

கடைசியாக விஜயன் அந்த போர்கால கதைகர்த்தா போரின் நடுவே சிக்கி தவிக்கிறார் என்று கூறியதாக நியாபகம். அவர் அந்த கதையை வெளியிட்டால் தற்போதைய நிலைமைக்கு பொருந்தலாம். ஆவலுடன் காத்திருப்போம்... வேறு என்ன செய்ய முடியும் :).

காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

புலா சுலாகி சொன்னது…

ஷிவா,

நீங்கள் ஒரு பிளாக் வைத்து இருப்பதே இப்போது தான் தெரிகிறது.

தொடருங்கள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

பூங்காவனம் சொன்னது…

கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

கனவில் வாழ்பவன் சொன்னது…

தலை புது பதிவுகள் எதுவும் எழுதவில்லையா???

Joe சொன்னது…

நன்றாக எழுதுகிறீர்கள், இன்னும் நிறைய இடுகைகள் எழுத வாழ்த்துக்கள்!