சனி, 22 மே, 2010

மரணத்தின் தாகம்

ஹாய் நண்பர்களே!

லைலா புயல் வழக்கம் போல் ஒரிசா பக்கமாக ஓடி விட்டது! இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு வீடியோ கேம் பற்றியது! RED DEAD REDEMPTION என்ற பெயரில் xbox 360 , ps3 console காக ரீலீஸ் ஆகி உள்ளது. இந்த கேம் பற்றிய முக்கியமான விஷயம் இது கௌபாய் கதையை தழுவி வடிவமைக்க பட்டுள்ளது தான்.

இந்த கேம் மில் ஜான் மார்ஸ்டன் என்ற முன்னாள் திருடனின் கதாபாத்திரத்தில் நாம் விளையாட வேண்டும். டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் போன்ற கெளபாய் கதைகள் மீது தீரா காதல் கொண்ட வாசகர்களுக்கு, மேற்கத்திய கௌபாய் உலகில் உலா வர இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

5 கருத்துகள்:

King Viswa சொன்னது…

போங்க பாசு, எனகென்னவோ இது போன ரெட் டேட் ரிவால்வர் கேம் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை.

நீங்க அந்த கேம் விளையாடி இருக்கீங்களா?

cap tiger சொன்னது…

இல்லபா, ரெட் டெட் ரிவால்வர் நான் விளையாடியதில்ல! ஆனா இந்த கேம் ல ஓபன் வேர்ல்டு ரொம்ப பெருசு... குதிரை சவாரி, அதுவும் அப்பலுசா வகை குதிரையெல்லாம் இருக்குல!

King Viswa சொன்னது…

அது சரி. ஆனா, இந்த கேமும் நல்லாதான் இருக்கு. ஆனா, போன கேம் தான் சூப்பர்.

Rafiq Raja சொன்னது…

டைகர், வீடியோ கேம்களில் மூழ்கி கிடந்தது ஒரு காலம். அது நம் நேரத்தை சுழுவாக கபளீகரம் பண்ணி விடும் என்று அறிந்து மீண்டு வந்தேன்.

ஆனால், கவ்பாய்கள் அடங்கிய இந்த விளையாட்டு விசித்திரமாக தெரிகிறது.. .ஒரு முறை முயன்று பார்த்து விட வேண்டியது தான்.

cap tiger சொன்னது…

ஆமாம் நண்பரே, வீடியோ கேம்கள் நம் நேரத்தை கரைத்து விடுகிறது என்பதென்னவோ உண்மைதான். நீங்கள் சொல்லவது போல் தமிழ் காமிக்ஸ் ரசிகருக்கு பரிச்சயமான கௌபாய் உலகம் என்பதால் இந்த கேம் நம்மை விளையாட வருமாறு தூண்டுகிறது... :) நம் நண்பர் கிங் விஸ்வாவும் முன்னாள் கேம் வேட்டையர் என்று தெரிகிறது. :))