புதன், 6 ஜனவரி, 2010



ஜனவரி மாத புத்தக கண்காட்சி பற்றி உங்களுக்கு சொல்ல தேவையில்லை ! எல்லாரும் விரும்பும் எதிர்பார்க்கும் ஒரு கண்காட்சி , ஆனால் இந்த வருட புத்தக கண்காட்சியில் நமது லயன் முத்து காமிக்ஸ் என்று ஒரு ஸ்டால் இல்லாதது வருத்தமே, ஒரு வருட சந்தா, ரத்தபடலம் முன்பதிவு , பழைய காமிக்ஸ்களின் அணிவகுப்புகள் என்ற நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது :- ( அதைவிட கொடுமை பல ஸ்டால்களில் தமிழ் காமிக்ஸ் இங்கு எங்காவது இருக்குமா என்று கேட்டதற்கு " தமிழ் காமிக்ஸா? தெரியாதே சார், வேணும்னா சூப்பர் மென் , பேட் மென் காமிக்ஸ் கெடைக்கும் " என்றார்கள் .

2 கருத்துகள்:

Rafiq Raja சொன்னது…

நண்பரே, லயன் முத்து காமிக்ஸ்க்கென்று பிரத்யேகமான ஸ்டால்கள் எப்பவும் போல இம்முறையும் இல்லை. ஆனால் இன்போமேப்ஸ் ஸ்டாலில் வழக்கம் போல லயன், முத்து கிடைக்கிறது. அவர்கள் சந்தா தொகையோ, முன்பதிவோ வாங்குவதில்லை.

ஆனால், புத்தகங்களை கையபடுத்தி விடுங்கள். நமக்கு தபால் செலவு மிச்சம் :)

ILLUMINATI சொன்னது…

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html